உள்ளாட்சி தேர்தல்: அதிமுக விருப்ப மனு வாங்கும் தேதிகள் அறிவிப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரும் கழக உடன்பிறப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

15.11.2019 – வெள்ளிக்கிழமை மற்றும் 16.11.2019 – சனிக்கிழமை – ஆகிய இரண்டு நாட்களில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் தலைநகரங்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஒவ்வொரு பதவிக்கும் உரிய விருப்ப மனுவுக்கான கட்டணத் தொகையையும் அவர்கள் நிர்ணயித்துள்ளார்கள். அவை:-

1. மாநகராட்சி மேயர் 25,000
2. மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் 5,000
3. நகர மன்றத் தலைவர் 10,000
4. நகர மன்ற வார்டு உறுப்பினர் 2,500
5. பேரூராட்சி மன்றத் தலைவர் 5,000
6. பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 1,500
7. மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் 5,000
8. ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் 3,000

 

Read previous post:
0a1a
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட  சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கு பதில்  இஸ்லாமியர்கள் புதிதாக மசூதி கட்டிக்கொள்ள, அவர்கள்

Close