பன்வாரிலால் கள்ளாட்டம் ஆரம்பம்: கோவையில் ஆளுநர் ஆட்சி?

எதிர்க்கட்சிக்ள் ஆளும் புதுச்சேரி, டெல்லி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மத்திய பாரதிய ஜனதா அரசின் ஏஜெண்டுகளான துணைநிலை ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையை மீறி தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வது அன்றாட செய்தியாகி வருகிறது. இந்நிலையில் டயர்நக்கிகளின் ஆட்சியில் தமிழகமும், மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, அறிவிக்கப்படாத யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு வருகிறது.

மோடி அரசின் அரக்கப் பிடியில் சிக்கி ஏற்கெனவே தமிழகம் பல உரிமைகளை இழந்து மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது அதிகார வரம்பை மீறி, இன்று கோவை மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர்கள் யாரும் உடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டம் மற்றும் அதன் அருகிலுள்ள திருப்பூர் மாவட்டம் ஆகியவற்றின் மீது இந்துத்துவ அமைப்புகள் ஏற்கனவே கண் வைத்திருக்கும் நிலையில், இந்துத்துவ ஆளுநரான பன்வாரிலால் புரோகித்தின் இந்நடவடிக்கை சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது.

கோவை மாவட்டத்தில் இந்துத்துவ ஆளுநர் ஆட்சி அமல் செய்யப்பட்டு விட்டதா, என்ன?