ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்பட இயக்குனருக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தமிழ் ஆவண குறும்படம் ‘த எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கர் விருது வென்றது. தமிழ்நாட்டின் முதுமலையில் தயாரான இப்படம் சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதி குறித்தும், அவர்களுக்கு யானையுடனான உறவு குறித்தும் உருக்கமாக இந்த ஆவணப்படத்தை இயக்கியிருந்தார் பெண் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ். இந்த ஆவணப்படத்தை தயாரித்திருந்தார் குனீத் மோங்கா. நெட்பிளிக்ஸ் ஆவணப்படமான இப்படம் 41 நிமிடங்கள் ஒளிபரப்பாகக் கூடியது.

இந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதுடன் விழாவில் பேசிய இப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், பழங்குடி மக்களையும் விலங்குகளையும் முன்னிலைப்படுத்திய தங்களது இந்த படத்தை அங்கீகரித்தமைக்காக அகாடமிக்கு நன்றி தெரிவித்ததுடன், தம் தாய்நாடான இந்தியாவுக்கு இவ்விருதை சமர்ப்பித்தார்

இந்நிலையில், அவர் ஆஸ்கர் விருதுடன் சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ் திரையுலகினர், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

0a1a

சென்னை திரும்பிய இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக அரசின் தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பின்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

முன்னதாக, இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளி ஆகியோரை அழைத்து தலா 1 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை அளித்து கௌரவப்படுத்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலை தெப்பக்காடு மற்றும் ஆனைமலை கோழிகமுத்தி யானைகள் முகாம்களில் பணிபுரிந்து வரும் 91 பணியாளர்ளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Read previous post:
0a1c
தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்: செப்.15 முதல் அமல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2-வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது

Close