தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி இங்கு 5 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டனர்.

கன்னியாகுமரி தொகுதி – மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி தொகுதி – தமிழிசை சவுந்தரராஜன், மாநிலத் தலைவர்

கோவை தொகுதி – சி.பி.ராதாகிருஷ்ணன்

சிவகங்கை – எச்.ராஜா

ராமநாதபுரம் – நயினார் நாகேந்திரன்

இதில் கன்னியாகுமரியில் பொன் ராதாவையும், சிவகங்கையில் எச்.ராஜாவையும் எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். தூத்துக்குடியில் தமிழிசையை எதிர்த்து திமுக சார்பில் கனிமொழியும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் பி.ஆர்.நடராஜனும், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நவாஸ் கனியும் போட்டியிடுகிறார்கள்.