“அபத்தத்தின் சிகரம் சீமான்”: தோழர் தியாகு விமர்சனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை விமர்சனம் செய்திருக்கிறார் தோழர் தியாகு.

சீமான் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவுமின்றி அறிவார்ந்த சமூகம் எதை மனசாட்சியாகச் சொல்கிறதோ அதையே பேசி இருக்கிறார் தியாகு. அவரது விமர்சனத்தின்படி –

# சீமான் பேசுவது தமிழ்தேசியமே அல்ல. அது போலி தமிழ்தேசியம்.

# பார்ப்பனிய இந்திய அரசுக்கு துணைபோகும் கங்காணி வேலையை செய்துவருகிறார் சீமான்.

# சீமான் அரசியல் செய்வது பிரபாகரன் வழியில் அல்ல; வரதராச பெருமாள் வழியில்

# பிரபாகரன் போற்றி நட்பு பாராட்டிய வைகோவையும், கோவை ராமகிருஷ்ணனையும் தூற்ற சீமானுக்கு தகுதி உள்ளதா?

# பிரபாகரன் படத்தை வைத்து சீமான் ஓட்டுப் பிச்சை எடுப்பது, விளக்கில் பீடி பற்ற வைப்பதற்கு சமம்.

# பிரபாகரனுக்கும், சீமானின் ஓட்டு அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?

# சீமான் தன்னை பிரபாகரனைவிட பெரிய ஆள் என நினைத்துக் கொள்கிறாரா?

# டாக்டர் அம்பேத்கருக்கு ‘மூக் நாயக்’ என்ற பெயர் உண்டு. ஆக, அவரும் தெலுங்கர் என சீமான் சொல்லுவாரா?

# சீமான் பெரிய வரலாற்று ஆராய்ச்சியாளரைப் போல புரளியை கக்கிக்கொண்டே போவது நல்லதல்ல.

தியாகு பேச்சு – வீடியோ: