சத்யராஜ் நடிக்கும் படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’: தலைப்பை வெளியிட்டார் திருமுருகன் காந்தி

0a1bசத்யராஜ் நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘தீர்ப்புகள் விற்கப்படும்’. சர்ச்சைக்கும், எதிர்பார்ப்புக்கும் உரிய இத்தலைப்பை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று (நவம்பர் 17ஆம் தேதி) வெளியிட்டார்.

ஹனிபீ கிரியேசன்ஸ் சார்பில் சஞ்சீவ் மீராசாகிப் தயாரிக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தை தீரன் இயக்குகிறார். ‘கருட வேகா’ தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைக்க, படத்தொகுப்பை சரத் கவனிக்கிறார்.

 “உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். சமூகப் பிரச்சனைகளை உள்ளடக்கிய தரமான பொழுதுபோக்குப் படத்தை வழங்கும் எங்கள் நோக்கம், இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தின் மூலம் தெரியவரும். இந்தப் படம், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கதையின் நாயகன் சமூகநீதிப் போராளி. சத்யராஜ் சார் சமரசமற்ற போர்குணம் கொண்ட மனிதர் என்ற அடிப்படையில், அவர் தான் இந்த கதாபாத்திரத்துக்கு எங்களின் ஒரே தேர்வாக இருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த (டிசம்பர்) மாதம் துவங்க உள்ளது” என்றார் இயக்குநர் தீரன்.