மார்க்கெட்டுக்கு காய்கறி ஏற்றிவரும் டெம்போ பெயர் தான் ‘தங்கரதம்’

‘தங்கரதம்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகியிருக்கிறது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறி ஏற்றிவரும் டெம்போக்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காதல் கதை இது. படத்தில் ஹீரோ ஓட்டும் டெம்போ பெயர் தான் – தங்கரதம். கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த ‘தங்கரதம்’ டெம்போவும் ஒன்று.

இதில் வெற்றி, அதிதி கிருஷ்ணா என்ற புதுமுகங்கள் நாயகன், நாயகியாக நடிக்க, நான் கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா, லொள்ளு சபா சாமிநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.  நான் கடவுள் ராஜேந்திரன் ஒரு தனிப்பாடலுக்கு ஆடியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக டிஸ்கோ சாந்தியின் தங்கை சுசித்ரா ஆடியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் உதவியாளர் டோனி பிரிட்டோ இசையமைக்க, ஜேக்கப் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்ய, யுகபாரதி மற்றும் பாலமுருகன் பாடல் வரிகள் எழுத, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பாலமுருகன். பினுராம் நிர்வாகத் தயாரிப்பில்,NTC MEDIA மற்றும் V-Care  Production சார்பில் தயாரிக்கிறார் வர்கீஸ்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ், படத்தின் டிசைன்களை பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டியுள்ளார்.

Read previous post:
0a1
Jayalalitha: The photograph ‘ruling’ an Indian state

How is ailing Tamil Nadu Chief Minister Jayaram Jayalalitha still ruling the southern Indian state? She has been in hospital

Close