”மனிதத்துடன் கூடிய ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நமது கடமை!” – கமல்ஹாசன்

ஆசிரியர் தினமான இன்று (செப்டம்பர் 5) நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ”கையடக்க தொலைபேசியிலேயே அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், இந்தத் தலைமுறையினருக்கு அறம் சார்ந்த அறிவையும், திறனையும் கற்றுத்தந்திட மனிதத்துடன் கூடிய ஆசிரியர்கள் அவசியமானவர்கள். அவ்வாறான ஆசிரியர்களுக்கு மரியாதை செய்வது நமது கடமை. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார் கமல்ஹாசன்.