கொலையாளி ராம்குமாரைவிட கொடூரமானவர்கள் இவர்கள்!

“காந்தி கொலையில் ஒரு நாதுராம்!

சுவாதி கொலையில் ஒரு ராம்குமார்!

இரண்டிலுமே குற்றவாளி ராம்…

இரண்டிலுமே குறிவைக்கப்பட்டது யாம்…”

நான்கே வரிகளில் தேசத்தில் நிகழும் அவலத்தை தோலுரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் ஆலூர் ஷா நவாஸ் அவர்களை பாராட்டுகிறேன்.

                                # # #

சகோதரி சுவாதியின் படுகொலையில் காவல்துறை கொலையாளியை பிடிப்பதற்காக அல்லும் பகலும் பாடுபட்டு இருந்தபோது, அவர்களின் தீவிர முயற்சியை திசைதிருப்பும் நோக்கில், படுகொலையை செய்தவன் ஒரு இஸ்லாமியன் என்ற கருத்தை வெளியிட்ட ஒய்ஜி மகேந்திரன் போன்றவர்களும், அவரின் கருத்தை ஆதரிக்கிறேன் என பகிரங்கமாக கூறிய கல்யாணராமன் போன்றவர்களும் கொலையாளியை விட கொடூரமானவர்கள் என்பதை மறுத்துவிட முடியாது

ஒரு பெண்ணின் உயிர் பலியை வைத்து பல்லாயிரம் இஸ்லாம் உயிர்களை காவு வாங்க நினைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் …

இரு சமூகங்களுக்கு இடையே பெரும் மோதலுக்கு வித்திட்ட இவர்கள் நாட்டில் பேணப்படும் இறையாண்மைக்கும் சமூக ஒற்றுமைக்கும் எதிரானவர்கள் என்ற கோணத்தில் அவர்களின் மீது காவல்துறையே வழக்கு தொடுக்க வேண்டும்; அல்லது நீதிமன்றமே முன்வந்து அவர்களின் மீது வழக்கு தொடுக்க வேண்டும். இல்லையேல் அனைத்து சந்தர்ப்பங்களையும் இவர்கள் மதக்கலவரமாக தூண்டும் பெரும் ஆபத்து இருக்கிறது …..

ராம்குமார் என்ற கொலையாளியின் வன்மத்தை விட மதக்கலவரத்தை தூண்ட நினைத்தவர்களின் வன்மம் தேசத்தின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் ஆபத்தானது என்பதை சட்டமும் காவல்துறையும் நீதித்துறையும் கருத்தில் கொள்ளவேண்டும்…

ஒய்ஜிமகேந்திரன் போன்றவர்களிடம் சட்டமும், காவல்துறையும், நீதியும் என்ன செய்யப் போகிறது என்பதை மக்கள் விழிப்புடன் கண்காணிக்க துவங்கியுள்ளனர்…. பார்ப்போம்.

சிபிசந்தர்

திரைப்பட இயக்குனர், விடுதலை சிறுத்தைகள் கட்சி