தமிழ் டிவி சீரியல் நடிகை சபர்ணா தற்கொலை: வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்!

கோவையை சேர்ந்தவர் சபர்ணா. இவர் சென்னைக்கு வந்து நிகழ்ச்சி தொகுப்பாளராக சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர். பின்னர் சன் டிவி சீரியல்களில் நடித்தார். ‘சொந்தம் பந்தம்’ சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானார். அத்துடன் ‘படிக்காதவன்’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘காளை’, ‘பூஜை’ உள்பட பல திரைப்படங்களில் கதாநாயகிக்கு தோழியாகவும் நடித்துள்ளார்.

அவர் மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவரது உடல் அழுகிய நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்கொலைக்காண காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read previous post:
t12
‘Famous Premiere League’ Cricket Tournament Jersey launch

Close