“விஜய் சேதுபதி நிச்சயம் அழைப்பார்”: காத்திருக்கிறார் நடிகை ஸ்ரீஜா!

திருமண வீட்டாருக்கு திருமண ஏற்பாட்டு சிரமங்களையும், செலவையும் குறைக்கும் நோக்கத்தில் ‘மை கிராண்ட் வெட்டிங் ஆப்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. ‘கங்காரு’, ‘வந்தா மல’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நாயகி ஸ்ரீஜா, இந்த செயலியை செய்தியாளர்கள் முன்னிலையில் இன்று அறிமுகப்படுத்தினார்.

அப்போது ஸ்ரீஜாவிடம், அவரது திருமணம் எப்போது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இன்னும் திரையுலகில் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதனால் இப்போதைக்கு திருமணம் என்கிற பேச்சுக்கு இடமில்லை. ஆனால், திருமணம் செய்துகொள்ளும் சமயத்தில் இந்த ‘மை கிராண்ட் வெட்டிங் ஆப்ஸ்’ எனக்கு ரொம்பவே கைகொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

“தமிழ் நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு அமைவதில்லை” என நடிகர் விஜய் சேதுபதி அமர்ந்திருந்த ஒரு விழா மேடையில், சில மாதங்களுக்கு முன், தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார் ஸ்ரீஜா. அதன்பிறகு வாய்ப்புகள் ஏதும் தேடி வந்துள்ளதா என கேட்டதற்கு, “அந்த நிகழ்விற்கு பிறகு விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் என்னை தொடர்புகொண்டு பேசினார்கள். உரிய வாய்ப்புகள் வரும்போது அழைப்பதாகவும் ஊக்கப்படுத்தினார்கள். நீங்கள் இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்து கேட்கிறீர்கள் அல்லவா? அதனாலேயே நான் ஒரு நல்ல இடத்திற்கு நிச்சயம் வருவேன் என நம்புகிறேன்” என்றார் ஸ்ரீஜா.

Read previous post:
0a1l
நடிகை ஸ்ரீஜா அறிமுகம் செய்த ‘மை கிராண்ட் வெட்டிங் ஆப்ஸ்’

கிராமப்புறங்களில் திருமணம் நடத்துபவர்கள் இன்றும்கூட திருமணத்துக்கு தேவையானவற்றை தாங்களே பார்த்துப் பார்த்து வாங்குகிறார்கள்.. திருமண ஏற்பாட்டிற்கான ஒவ்வொரு விஷயத்தையும் தாங்களே தேர்வு செய்து தங்கள் விருப்பப்படி திருமண

Close