துஷ்யந்த், விவேக் பிரசன்னா நடிக்கும் நகைச்சுவை ததும்பும் ‘ஷூட்டிங் ஸ்டார்’ படத்தின் தொடக்கவிழா! 

ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் சார்பாக எம் ஜெ ரமணன், ஜானி டூகல், வினம்பர சாஸ்திரி ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்க, எம் ஜெ ரமணன் இயக்கத்தில் காமெடி கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக உள்ளது ‘ஷூட்டிங் ஸ்டார்’.

துஷ்யந்த், விவேக் பிரசன்னா, தெலுங்கு நடிகர் சீனிவாச ரெட்டி, இந்தி நடிகர் ரவி கிஷன் மற்றும் சில தமிழ் படங்களில் முன்னணி நாயகியாக நடித்த மாஷூம் சங்கர் முக்கிய வேடங்களில் நடிக்க, பல பிரபல இந்தி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்கள்.

வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்த ஒருவனை, அவனை சுற்றியுள்ளவர்கள் எப்படி, மென்மேலும் ஏமாளி ஆக்கினார்கள் என்பதைப் பற்றி நகைச்சுவையாக சொல்வதே இப்படத்தின் கதை.

ஹாலிவுட், பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த எம் ஜெ ரமணன், ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்கள், தான் எழுதி இயக்கும் இப்படத்தில் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

படத்தின் ஒளிப்பதிவை எஸ் ஆர் சதீஷ்குமார் கவனிக்க, பிரபல ஹிந்தி இசையமைப்பாளர்கள் அம்ஜத்-நதிம்-ஆமீர் இசையமைக்க, கலை இயக்குநராக சேத்தன் பாடக், எடிட்டராக சசிக்குமார், ஸ்டண்ட் மாஸ்டராக கனல் கண்ணன், நடன இயக்குனராக விஷ்ணு தேவா பணிபுரிகிறார்கள்.

இப்படத்தை, இந்தியில் பல திரைப்படங்களையும், விளம்பர படங்களையும் தயாரித்த ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக தயாரிக்கிறது.  படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் துவங்கி சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் கஜுராஹோ பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

இப்படத்தின் தொடக்கவிழா பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் பார்த்திபன், நடிகை குஷ்பு மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.

0a1c

Read previous post:
0a1b
சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குலு குலு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Close