சைகோ காமெடி த்ரில்லர் – ‘சைவ கோமாளி’!

எஸ்.எம்.எஸ்.மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.சி.சுரேஷ், மகேந்திரன், சாய் மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் ‘சைவ கோமாளி’.

இயக்குனர்கள் தரணி, ஜெகன், பாபு சிவன், சாந்தகுமார் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் சீதாராம் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

புதுமுகம் ரஞ்சித் நாயகனாக நடிக்க, ரெஹானா (மனிஷா ஜித்) நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், சூப்பர்குட் லட்சுமணன், கிரேன் மனோகர், கிருஷ்ணமூர்த்தி, டி.கே.கலா, காயத்ரி, வனிதா, மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் தரணி, பேரரசு, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பி.எல்.தேனப்பன், கதிரேசன் உள்ளிட்ட பிரபலங்களும், படக்குழுவினரும் கலந்துகொண்டார்கள்.

0a1a

இப்படம் குறித்து இயக்குனர் சுரேஷ் சீதாராம் கூறுகையில், “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சைகோவும் இருக்கிறான்; கோமாளியும் இருக்கிறான். அவன் எப்படி தன்னை வெளிப்படுத்துவான் என்பது இந்தச் சமூகம் அவனை எதிர்கொள்கின்ற முறையில் தான் இருக்கிறது என்ற கருத்தையும், இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளையும், அதை தடுத்து நிறுத்துவதற்கான தீர்வையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்.

108 ஆம்புலன்ஸின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கும் ‘ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டா ஒதுங்கு, யம்மா ஹாஸ்பிட்டல் வந்துடுச்சு இறங்கு’ என்ற பாடல் காட்சியை ஈ.சி.ஆர். ரோடு, பல்லாவரம், பம்மல், கீழுர், மணப்பாக்கம் போன்ற பகுதிகளில் குத்துப்பாடலாக படமாக்கி இருக்கிறோம்.

இந்த குத்துப்பாடலில் 108 ஆம்புலன்ஸின் கம்பவுண்டராக நடித்திருக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், டிரைவராக நடித்திருக்கும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார், முதலுதவி மருத்துவராக நடித்திருக்கும் நடிகை ரெஹானா ஆகியோர் பங்கேற்றுள்ளார்கள். இப்பாடலை கானா பாலா எழுதி பாடியிருக்கிறார்.

படத்தில் அஸிஸ்டென்ட் போலீஸ் கமிஷனராக பவர் ஸ்டார் சீனிவாசன், ஆடம்பர வாழ்க்கை வாழும் கிரிமினல் அமைச்சராக ஜி.எம்.குமார், கலகலப்பூட்டும் காமெடி வேடத்தில் டி.பி.கஜேந்திரன், படம் பார்ப்பவர்களை மிரட்டும் சைக்கோ வேடத்தில் புதுமுக நடிகர் ரஞ்சித் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கக் கூடிய படமாக நிச்சயம் இருக்கும் என்றார் இயக்குனர்.

ஒளிப்பதிவு – கே.பாலா

இசை – கணேஷ் ராகவேந்திரா

எடிட்டிங் – வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய்

கலை- கார்த்திக், ராஜ்குமார்

நடனம்  – தம்பி சிவா

சண்டை பயிற்சி- டி.ஷங்கர்

 

Read previous post:
0a1b
Amended tax laws are as poorly conceptualised as demonetisation – and may even be unconstitutional

The Taxation Laws (Second Amendment) Bill, 2016, passed by the Lok Sabha on Tuesday with no debate, increases the penalty on those with

Close