ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகிறது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம்  இப்போது அதன் பரந்த பிளாக்பஸ்டர் திரைப்பட வரிசையில்  மற்றொரு தலைசிறந்த படைப்பான RRR, “ஆர்ஆர்ஆர்” படத்தை இணைத்துள்ளது. நம் நாட்டின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான SS ராஜமௌலி இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோருடன் ஆலியா பட்  இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது குறிப்பிடதக்கது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த தலை சிறந்த காவியத்தை, அதன் சந்தாதாரர்களுக்குக் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது. இப்படத்தில் அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஷ்ரேயா சரண் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். எம்.எம்.கீரவாணியின் அசத்தலான இசையும், மதன் கார்க்கியின் அட்டகாசமான வசனங்களும், பிரமாண்டமான காட்சியமைப்பும் திரைப்பட ரசிகர்களுக்கு அசாத்தியமான சினிமா அனுபவத்தை அளித்தன.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதுமிலிருந்து பரந்த அளவில் வழங்குகிறது.

Read previous post:
0a1a
“கீழடி அகழாய்வை அமர்நாத் இராமகிருட்டிணனிடம் ஒப்படைக்க வேண்டும்”: தமிழக முதல்வருக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்

பழ.நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வுக்குச் சரியான இடத்தை தேர்வு செய்து நடத்தவில்லை என இந்தியத் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணன்

Close