பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம்: மே மாதம் படப்பிடிப்பு ஆரம்பம்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பை மே மாதம் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கபாலி’. தாணு தயாரிப்பில் வெளியான இப்படம் பெரும் வசூல் சாதனை செய்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’-வில் நடித்து வருகிறார் ரஜினி.

‘2.0’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்றுவிட்டு, இறுதிகட்ட பணிகளில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்கள். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.

அதனைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் ரஞ்சித். படத்தை தனுஷ் தயாரிக்க இருக்கிறார். இந்த அறிவிப்பை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவின் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பை மே மாதம் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Read previous post:
j7
Julieum 4 Perum Movie Photo Gallery

Julieum 4 Perum Tamil Movie starring Amudhavan, George, Yoganand, Satheesh Kumar and Alya Mansa in the lead, Directed by Satheesh

Close