”சபாபதி’ படம் எனக்கு நல்ல ஓபனிங்காக இருக்கும்”: ‘குக் வித் கோமாளி’ புகழ் பேச்சு

சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘சபாபதி’. வருகிற (நவம்பர்) 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் சந்தானம் திக்கித் திக்கிப் பேசுபவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, முனீஸ்காந்த், மதுரை முத்து, ‘குக் வித் கோமாளி’ புகழ், வம்சி, சாயஜி சிண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கியுள்ளார். சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்ய, லியோ ஜான் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.ரமேஷ்குமார் தயாரித்துள்ளார். மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

0a1f

’சபாபதி’ திரைப்படம் வருகிற 19ஆம் தேதி திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் ‘குக் வித் கோமாளி’ புகழ் பேசியதாவது:-

சேனலில் எப்பொழுது மைக் கொடுப்பார்கள் என்று காத்திருப்பேன். மைக் கொடுத்ததுமே டப்பு, டப்புனு பேசிருவேன். ஆனா, இங்கு மைக் கொடுத்தும் படபடப்பாக இருக்கு.

சாலிகிராமத்தில் ஷூட் முடித்துவிட்டு பைக்கில் சென்று கொண்டிருந்தேன். இது தான் சந்தானம் சார் ஆபீஸ் என்று என் நண்பனிடம் சொன்னேன். திடீர்னு போன் வந்தது. ”தம்பி, சந்தானம் சார் ஆபீஸில் இருந்து கூப்பிடுறோம், நீங்க எப்பொழுது வர முடியும்?” என்றார்கள். ”நான் கீழே தான் நிற்கிறேன்” என்றேன். ”தம்பி, நீங்க விஜய் டிவியில பண்ற மாதிரியே காமெடி பண்ணாதீங்க. எப்போ வருகிறீர்கள்?” என்று ராஜ்குமார் சார் கேட்டார்.

”நிஜமாகவே கீழே தான் சார் நிற்கிறேன்” என்று சொல்லி, ஆபீஸுக்கு சென்றேன். அண்ணன் படத்தில் எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன்.

நான் கார் வாங்கியதும் சந்தானம் அண்ணனிடம் தான் முதலில் காட்டினேன். எனக்கு ஒரு விநாயகர் சிலையை கொடுத்தார். முதல் கடவுளையும், முதல் வாய்ப்பையும் அண்ணன் தான் கொடுத்தார். இந்த படம் எனக்கு நல்ல ஓபனிங்கா இருக்கும்.

அவர் சான்ஸ் கொடுத்ததும், இந்த படத்தில் அண்ணன் நம்ம வச்சு செஞ்சுடுவாப்ல என்று நினைத்தேன். இந்த படத்தில் அவர் சூப்பராக நடித்திருக்கிறார். படம் வேற லெவலில் வந்திருக்கிறது.

இவ்வாறு புகழ் பேசினார்.

Read previous post:
0a1f
‘சபாபதி’ அனுபவம் பற்றி சந்தானம்: ”திக்கித் திக்கி பேசி நடிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது!”

சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘சபாபதி’. வருகிற (நவம்பர்) 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் சந்தானம் திக்கித் திக்கிப் பேசுபவராக நடித்துள்ளார். அவருக்கு

Close