மோடியை கலாய்த்த பிரகாஷ்ராஜ்: “குஜராத்தில் 150 இடங்களில் வெற்றி பெறுவது என்ற இலக்கு என்னாச்சு?”

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக பாஜக மீது கடும் விமர்சனங்களை வைத்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தன்னுடன் ஒப்பிடும்போது பிரதமர் மோடியே சிறந்த நடிகர் என்ற கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான இன்று பிரகாஷ் ராஜ் பதிவு செய்து ட்வீட்டில், “அன்புள்ள பிரதமரே, வெற்றிக்கு வாழ்த்துக்கள்…! ஆனால் நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?” என்று #justasking என்ற ஹேஷ்டேக் கீழ் பதிவிட்டுள்ளார்.

“எனது பாசமிகு பிரதமருக்கு…

அன்புள்ள ஐயா,

வாழ்த்துகள்…! ஆம்… ! ஆனால்…

நீங்கள் உங்கள் வளர்ச்சி அரசியலால் இத்தேர்தலில் அமோக வெற்றியல்லவா பெற்றிருக்க வேண்டும்?

150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது என்னவாயிற்று???

இப்போதாவது நீங்கள் சில உண்மைகளை உணர நேரம் ஒதுக்குவீர்களா?

a) பிரிவினைவாத அரசியல் எடுபடவில்லை என்பதை உணர்வீர்களா?

b) பாகிஸ்தான்.. மதம்.. சாதி.. என சமூகத்தை அச்சுறுத்தும் சில அடிப்படைவாதிகள் ஆதரிக்கும் இத்தகைய கொள்கைகளைத் தாண்டியும் இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சினைகள் உள்ளன என்பதை உணர்வீர்களா?

c) கிராமப்புறங்களில்தான் தீர்க்கப்பட வேண்டிய உண்மையான சிக்கல்கள் இருக்கின்றன என்பதை உணர்வீர்களா?

விவசாயிகள்… ஏழைகள்.. கிராமவாசிகளின் புறக்கணிக்கப்பட்ட குரல் இப்போது வலுப்பெற்றிருக்கிறது.

அது உங்களுக்கு கேட்கிறதா..?

சும்மாத்தான் கேட்கிறேன்  #justasking”

எனப் பதிவிட்டுள்ளார்.