பிரபுதேவா நடிப்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

நடிகரும், இயக்குனருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் புதிய படம் இன்று (15-07-2021) சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.

‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும்  இப்பெயரிடப்படாத திரைப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன்  கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் மினி ஸ்டுடியோ என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் வினோத்குமார் தயாரிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

Read previous post:
0a1a
”இனி அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை”: மக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற பின் சில நாட்கள் அங்கேயே ஓய்வெடுத்தார். இதன்பின் அவர் அமெரிக்காவில் இருந்து

Close