5 தொகுதிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக – பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவர்கள் விவரம்:

1.தர்மபுரி – அன்புமணி ராமதாஸ் (மக்களவை உறுப்பினர்)

2.விழுப்புரம் – வடிவேல் ராவணன் (பாமக பொதுச்செயலாளர்)

3.கடலூர் – ரா.கோவிந்தசாமி (பாமக சொத்து பாதுகாப்புக் குழு தலைவர்)

4.அரக்கோணம்- முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி

5.மத்திய சென்னை – முனைவர் சாம்பால் (பா.ம.க தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர்)

பாமக.வுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை.

Read previous post:
0a1a
அதிமுக வேட்பாளர் முழு பட்டியல் வெளியீடு!

அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பட்டியலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களின் பட்டியலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்:

Close