மோடியின் மனைவிக்கு நீதி கோரி மோடியிடமே மனு கொடுக்கும் திட்டத்துக்கு அமோக ஆதரவு!

“முஸ்லிம் பெண்களை காப்பாற்ற போகிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி கையில் எடுத்துள்ள முத்தலாக் விவகாரம் தற்போது மோடியின் பக்கமே திரும்பியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளை குவித்த பா.ஜ.க மற்றும் மோடியின் முத்தலாக் விவகாரம் பல விமர்சனங்களையும் இவர்கள் மீது வைக்க காரணமாகியுள்ளது.

முஸ்லிம் பெண்களுக்கு சமஉரிமை மற்றும் நீதி வழங்க பாடுபடுவதாக மோடி கூறும் வேலையில், ஜாக்கியா ஜாஃபரி, இஷ்ரத் ஜஹான், பல்கிஸ் பானு ஆகியோருக்கு எப்போது நீதி வழங்கப் போகிறீர்கள் என்று மக்கள் கேள்வி எழுப்பினர். தற்போது இதன் மற்றொரு பகுதியாக #JusticeForJashodaben என்று மோடியின் மனைவியான ஜசொதாபேன்னிற்கு நீதிவேண்டி இணையதளங்களில் மனு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில், “இஸ்லாத்தில் பெண்கள் தாங்கள் யாரையும் மணப்பதற்கும் தேவையென்றால் விவாகரத்து செய்வதற்கும் அவர்களுக்கு முழு உரிமையும் வழங்கப்படுகிறது. தற்போது பா.ஜ.க / மோடி தங்கள் கையில் எடுத்துள்ள முத்தலாக் என்கிற விஷயம் அவர்கள் பரப்புவது போன்று முஸ்லிம் சமுதாயத்தில் பின்பற்றபப்டுவது இல்லை. துரதிர்ஷ்டவசமாக சில சம்பவங்கள் அப்படி நடந்தாலும் கூட ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் அவற்றிற்கு எதிராகத்தான் இருக்கிறது.”  “ஆனால் மோடி நீங்கள் திருமணம் செய்து, மனைவிக்கான எந்த ஒரு உரிமையும் கொடுக்கப்படாமல் உங்களால் பின்னாளில் கைவிடப்பட்ட உங்கள் மனைவியான ஜசொதாபேன் செய்த பாவம் என்ன?” என்று அந்த மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. “நாட்டில் வகுப்புவாத பிளவுகளை ஏற்படுத்தாமல் தனது வீட்டில் உள்ள பிரச்சனைகளை முதலில் சரி செய்யுங்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “நீங்கள் ஜசொதாபேன்னிற்கு ஒரு மனைவிக்கான உரிமையை மறுத்ததோடு மட்டுமல்லாமல் இந்நாட்டு குடிமகன் ஒருவருக்கு கிடைக்ககூடிய உரிமைகளையும் மருத்துள்ளீர்கள். 2015 இல் ஜசொதாபேன் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்த போது திருமணத்திற்கான சான்றிதல் இல்லை என்று கூறி அவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் அலுவலகத்தை பொறுத்தவரை பாஸ்போர்ட் பெறுவதற்கு திருமணச் சான்றிதல் அவசியமான ஆவணம்.” என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

“உங்கள் மனைவியின் வாழ்க்கையை மட்டுமல்லாமல் நீங்கள் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையையும் சிதைத்துள்ளீர்கள். அப்பெண் பின்தொடரப்பட்டு கண்காணிக்கப்பட்டு பல்வேறு குஜராத் காவல்துறையினரால் உளவு பார்க்கப்பட்டுள்ளார். இதில் குற்றப்பிரிவு காவலர்கள், மாநில உளவுப் பிறிவு அதிகாரிகள், தீவிரவாத தடுப்புப் படை இவை அனைத்தும் அப்போது மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா வின் உத்தரவின் பேரில் “சாஹேப்பிற்காக” செய்துள்ளன. அந்த சாஹேப் வேறு எவருமில்லை, நீங்கள் தான்.” என்றும் குஜராத் கலவரத்தின் பெஸ்ட் பேகரி வழக்கை சுட்டிக்காட்டி “உங்களை போன்ற ஒருவர் பெண்கள் உரிமைகள் பற்றி பேசுவது வெற்று நடிப்பு, ஏனென்றால் நீங்கள் குஜராத் கலவரத்தில் முஸ்லிம் பெண்களை வன்முறை கும்பல் கற்பழித்து எரித்த போது அவர்களை நீங்கள் எவ்வாறு பார்த்துக்கொண்டீர்கள் என்று உலகிற்கே தெரியும்”

“அதனால் பிரதமரே முதலைக்கண்ணீர் வடிப்பதை நிறுத்துங்கள். அப்படி உங்கள் கூற்றில் நீங்கள் உண்மையுள்ளவரானால் முஸ்லிம் பெண்களிடமும், நீங்கள் பின்தொடர்ந்த பெண்ணிடமும், உங்கள் மனைவியிடமும் நீங்கள் இளைத்த கொடுமைகளுக்கு மன்னிப்புக் கேட்டு உங்கள் குற்றங்களுக்காக விசாரணைக்கு தயாராகுங்கள். மற்ற பேச்சுகள் அனைத்தையும் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவிற்கு ஏகப்பட்ட ஆதரவு குவிந்து வருகிறது.

அந்த மனுவுக்கான லிங்க்:

https://www.change.org/p/justice-for-jashodaben