சைக்கலாஜிக்கல் ஃபேண்டஸி திரில்லர் ’பெண்டுலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

0a1bதமிழ் சினிமாவில் சைக்கலாஜிக்கல் படங்கள் வருவது அரிது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிக்கல் ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படமாக ‘பெண்டுலம்’ படம் உருவாகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

’பெண்டுலம்’ படத்தை SURYA INDRAJIT FILMS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் திரவியம் பாலா தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ‘அசுரன்’ படப் புகழ் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா இருவரும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ஶ்ரீபதி, ஶ்ரீகுமார், T.S.K, விஜித், FIR ராம்,  ராம் ஜூனியர் எம்.ஜி.ஆர்., பிரேம்குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தயாரிப்பு – திரவியம் பாலா (SURYA INDRAJIT FILMS), இயக்குநர் – B.சதீஸ் குமரன், இசை – சைமன் கிங், ஒளிப்பதிவு – ஆனந்த், படத் தொகுப்பு – ராம் சதீஷ், கலை இயக்கம் – K.B.நந்து விஜித், பாடல்கள் – விவேகா, கு.கார்த்திக், சண்டைப் பயிற்சி இயக்கம் – டான் அசோக், நடனப் பயிற்சி இயக்கம் – ராஜேஷ், ஒப்பனை – அப்துல் ரசாக், உடைகள் – பெருமாள் செல்வம், விஷுவல் எஃபெக்ட்ஸ் – டோனி மேக்மித், தயாரிப்பு நிர்வாகி – பழனிவேல்.V., பத்திரிகை தொடர்பு – சதீஷ் (AIM), புகைப்படங்கள் – ஜூடி, போஸ்டர் டிசைனர் – ராஜ் டிசைனர் பாயிண்ட்.

20 ஆண்டுகளாக கேமரா பின்னணியிலும், ஒளிப்பதிவாளராக பல உலக விருதுகளை குவித்திட்ட குறும் படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணிபுரிந்த B.சதீஸ் குமரன் இப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.