“நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்ல நான் மட்டும் இருந்திருந்தா…”
“நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்ல நான் மட்டும் இருந்திருந்தா ஒரே புடுங்கா புடுங்கிருப்பேன்…”
“அங்க இருந்தவனுக சத்தமா கத்தியிருந்தாக்கூட கொலைகாரனுக விட்டுட்டு ஓடிருப்பானுக…”
– நொட்டை மசுரு பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு…
பொறந்த எட்டாவது மாசத்துல இருந்தே, “எவன் வம்பு தும்புக்கும் போகாத. உன் சோலிய மட்டும் பாரு. உனக்கெதுக்கு ஊர் வம்பு”ன்னு சுயநலத்த பருப்பு சோத்துல இருந்து பரோட்டா வரைக்கும் பிசைஞ்சு ஊட்ட வேண்டியது…! இன்னைக்கு வந்து பெரிய நொட்டி மாதிரி பிலாக்கனம் பேசுறது…!
எங்க ஊர்ல ரெண்டு குடும்பத்துக்கு இடையிலான சண்டைல ஆளுக்கொரு கட்டைய தூக்க, நானும் ஒரு கட்டைய தூக்கி ரெண்டு பக்கமும் விளாசி, போலீஸ் கேஸ்ல கிடந்தேன். அப்போ ஏட்டையா என் பெரியப்பா என்பதால சத்தமில்லாம வெளிய வந்தாச்சு..
அடுத்த ரெண்டு நாளைக்கு அம்புட்டு பக்கிகளும், “இவனுக்கு எதுக்கு இந்த சோலி?”ன்னுதான் பேசுச்சுக. “ஒரு ஊர் சண்டையவே தடுத்துட்டான்”னு ஒரு நாயும் சொல்லல. இதான் இந்த சமூகம்…
ரோட்டுல அடிபட்டுக் கிடக்குறவனப் பத்தி 108க்கு போன் பண்ணி சொன்னாலே, “நாங்க வர்ற வரைக்கும் அங்கயே இருங்க சார்”னு பீதிய கிளப்பும் பிக்காலிக் கூட்டம் சார் இது…
நாலஞ்சு பேரு தடதடன்னு கத்தி, அரிவாளோட வந்தா, யாருக்குமே பக்குன்னு தான் இருக்கும். மூளை வேலை செய்யாது. அதையும் மீறி ஏதாச்சும் செய்யணும்னா அதீத மனவலிமை இருக்கணும். அந்த ரகமெல்லாம் 0.0000001% தான்…
அதான் அந்த மாதிரி வீடியோ எல்லாம் வைரல் ஆகுது…
கீபோர்டுல வளச்சு வளச்சு ஆணிய புடுங்கும் தோழர்களிடம் கேட்டுப் பாருங்களேன் – “இதுவரைக்கும் ஏதாச்சும் அடிதடில சமாதானம் செய்யவாச்சும் கிட்ட போயிருக்கியா”ன்னு??
அந்த வகைல எங்க பட்டிக்காட்டானுக ஆயிரம் பங்கு தேவல. பின் விளைவு, பக்க விளைவு பத்தி யோசிக்காம உள்ள குதிப்பானுக..
ரொம்ப படிச்சா பயம் வந்திரும் போல…
வீர வசனம் பேசி லைக், கமண்ட், ஷேர் வாங்குறத விட்டுட்டு, அந்த புள்ளையோட சாவுக்குக் காரணமான நாய கண்டுபிடிச்சு போட்டுத் தள்ள ஏதாச்சும் செய்ங்கய்யா…
நானெல்லாம் பட்டிக்காட்டான் ரகம். மல்லுக்கு போகத் தெரியும். ஆனா, வித்தை தெரியாது. தெரிஞ்சவங்க உங்களால் முடிஞ்ச உதவிய செய்ங்கய்யா..
அதுக்கும் முன்னாடி, போனது ஒரு பொம்பளப்புள்ள உசுரு… அதுல சாதி, மதம், காதல், காமம், ஆண்ணியம், பெண்ணியம் ஆகிய நரைச்ச மசுருக்கு சாயம் பூசுற வேலை வேணாம்யா…
நம்ம வீட்டுலயும் புள்ளைங்க இருக்கு. முட்டைக்கு மயிர் புடுங்கும் தந்திரமெல்லாம் நம்ம வூட்டுலயும் நாளைக்கு நடக்கும்…
பொம்பளைங்க வைரம்யா… அத பாதுகாக்க வேண்டிய இரும்புய்யா நாம…
விலை மதிப்பில்லாத வைரத்த பாதுகாக்க வேண்டிய உறுதியான இரும்புய்யா நீ…
ச்சை..தூ..
– மாணிக் வீரமணி