அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’: ட்ரெய்லர் வெளியீடு

ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ’பிங்க்’. இந்த படம் தற்போது ’நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. இதை வினோத் இயக்கியுள்ளார்.

அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.