முதன் முறையாக இரு வேடங்களில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ நாயகி நீத்து சந்திரா!

‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படங்களில் நடித்த நீத்து சந்திரா ‘ஆதிபகவன்’ படத்துக்குp பிறகு தமிழில் ஆளையே காணவில்லை. இருந்தாலும் உள்ளேன் ஐயா என்று சொல்லுகிற விதமாக ‘சேட்டை’, ‘சிங்கம் 3’ படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

நீத்து சந்திரா நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகியாக ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் களம் இறங்குகிறார்.  வெறுமனே பாடல்களுக்கு மட்டும் வந்து போகும் நாயகியாக இல்லாமல் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறாராம்.

“முதன்முறையாக டபுள் ஆக்‌ஷன் பண்ணியிருக்கிறேன். இதுவரை நீங்கள் பார்க்காத வித்தியாசமான இரண்டு வேடங்கள் அவை. ‘ஆதிபகவன்’ படத்திலேயே சில காட்சிகளில் ஆக்‌ஷன் பண்ணியிருந்தேன். ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் எனக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் உண்டு” என்றார் நீத்து சந்திரா..

’வைகை எக்ஸ்பிரஸ்’ தனக்கு தமிழில் செகண்ட் இன்னிங்ஸாக இருக்கும் என்று நம்புகிறார் நீத்து சந்திரா.

 

Read previous post:
v7
“பல மடங்கு விறுவிறுப்பான படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்” – நடிகர் ஆர்கே

‘எல்லாம் அவன் செயல்’ படத்தை தினமும் ஏதாவது ஒரு சேனலில் வடிவேலு காமெடி மூலம் நினைவுபடுத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் வடிவேலு காமெடி மட்டுமே அந்த படத்தைக்

Close