நயன்தாராவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் படக்குழுவினர்!

‘ரெமோ’ வெற்றிப்படத்தை அடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா (ஜெயம் ராஜா) இயக்கத்தில், பெயரிடப்படாத புதிய படத்தை 24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரித்து வருகிறார் ஆர்.டி.ராஜா.

இப்படத்தில் நாயகியாக நடிக்கும் நயன்தாரா இன்று படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தபோது, அவருக்கு அங்கே இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இன்று நயன்தாராவுக்கு பிறந்த நாள் என்பதால், அவரது பிறந்த நாளை கொண்டாட படப்பிடிப்புத் தளத்திலேயே ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா

இதை பார்த்து மகிழ்ச்சியடைந்த நயன்தாரா, சிவகார்த்திகேயன், இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா உள்ளிட்ட படக்குழுவினரின் வாழ்த்துகளுக்கு இடையே கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.

மேலும், படக்குழுவினர் ஒவ்வொருவருடனும் தனித்தனியே சேர்ந்து நின்று உற்சாகமாக அவர் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

Read previous post:
0a1a
நாட்டில் கலவரம் மூளும் அபாயம்: குடியரசு தலைவருடன் மோடி திடீர் சந்திப்பு!

போதிய முன்னேற்பாடோ, திட்டமிடலோ இல்லாமல், “ரூ.500, ரூ.1000 செல்லாது” என கடந்த 8ஆம் தேதி திடீரென அறிவித்தார் நரேந்திர மோடி. போதிய கால அவகாசம் தரப்படாமல் உடனடியாக

Close