“எனக்குப் பிடித்த ஹீரோ ஒன் அன்ட் ஒன்லி ரஜினி சார்தான்!”

சிவா, நைனா சர்வார், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் நாயகி நைனா சர்வாருக்கு இது முதல் தமிழ்ப் படம். தனது அனுபவங்களை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார்…

என் சொந்த ஊர் பெங்களூர். பி காம் ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறேன் ஏற்கெனவே கன்னடத்தில் நான்கு படங்கள் முடித்துவிட்டேன். ‘அட்ரா மச்சான் விசிலு’ எனக்கு முதல் தமிழ்ப் படம் என்றாலும், இன்னொரு தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளேன். அந்தப் படம் ‘கொளஞ்சி’. ஸோ.. மொத்தம் ஆறு படங்கள்.

இந்தப் பட இயக்குநர் இதற்கு முன் நான் நடித்த படங்களைப் பார்த்தாரா என்று தெரியவில்லை. இந்தப் படத்துக்காக என்னை அணுகி கதை சொன்னார் இயக்குநர் கதை கேட்டபோது என் பாத்திரத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தினேன். நகைச்சுவையுடன் கூடிய பப்ளியான ஒரு ரோல். ரொம்பப் பிடித்திருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன். முழுசாக நடித்து முடித்த பிறகுதான் எனக்கு இந்தக் கதை எதைப் பற்றியது என்பது புரிந்தது. ஆனால் எனக்கு என் பாத்திரம் திருப்தியாக இருந்தது. அது போதும்.

என் ஹீரோ சிவா மாதிரி வசதியான அதாவது கன்வீனியன்டான ஒருவரைப் பார்க்க முடியுமா தெரியவில்லை. எனக்கு தமிழைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பேசுவது சிரமம். அதனால் செட்டில் எல்லோருடனும் பேச சிவாதான் உதவினார். நானும் இயக்குநரும் சிவா மூலம்தான் பேசிக் கொள்வோம்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் பவர் ஸ்டார் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருக்கும் எனக்கும் சேர்ந்த மாதிரி சீன்கள் இல்லை. அவருடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் நடிப்பேன். ஜோடியாகவும்தான்… இதில் தயக்கம் ஏதுமில்லை.

அட்ரா மச்சான் விசிலு’ பாடல் புரமோஷன் பார்த்துவிட்டு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் எதையும் ஏற்கவில்லை. மனசுக்குப் பிடிச்ச மாதிரி பாத்திரங்கள் அமைந்தால் நானே என் அடுத்த படத்தை அறிவிப்பேன்.

தமிழில் என் பேவரைட் நாயகி நயன்தாரா.

அப்ப ஹீரோ?

வேறு யார்… எவர்கிரீன் ஒன் அன்ட் ஒன்லி ரஜினி சார்தான்!” என்றார்.

Read previous post:
0a1o
விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் மோனிகா சிவா!   

இன்றைய குழந்தை நட்சத்திரங்கள் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பது உண்மை! கமல், ஸ்ரீதேவி, விஜய், சிம்பு, ஷாலினி, ஷாம்லி - இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் மோனிகா சிவாவும் வருங்கால நட்சத்திரப்

Close