திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் மக்களவை தொகுதிகள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:

திமுக (21 தொகுதிகள்):

1.வடசென்னை

2.தென்சென்னை

3.மத்திய சென்னை

4.ஸ்ரீபெரும்புதூர்

5.காஞ்சிபுரம் (தனி)

6.அரக்கோணம்

7.வேலூர்

8.திருவண்ணாமலை

9.ஆரணி

10.கள்ளக்குறிச்சி

11.பெரம்பலூர்

12.தஞ்சாவூர்

13.தருமபுரி

14.சேலம்

15.ஈரோடு

16.கோவை

17.நீலகிரி (தனி)

18.பொள்ளாச்சி

19.தென்காசி (தனி)

20.தூத்துக்குடி

21.தேனி

காங்கிரஸ் (10 தொகுதிகள்):

1.திருவள்ளூர் (தனி)

2.கடலூர்

3.மயிலாடுதுறை

4.சிவகங்கை

5.கிருஷ்ணகிரி

6.கரூர்

7.விருதுநகர்

8.கன்னியாகுமரி

9.திருநெல்வேலி

10.புதுச்சேரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2 தொகுதிகள்):

1.மதுரை

2.திண்டுக்கல்

இந்திய கம்யூனிஸ்ட் (2 தொகுதிகள்):

1.நாகை (தனி)

2.திருப்பூர்

விசிக (2 தொகுதிகள்):

1.சிதம்பரம் (தனி)

2.விழுப்புரம் (தனி)

மதிமுக (ஒரு தொகுதி):

1.திருச்சி

ஐயுஎம்எல் (ஒரு தொகுதி):

1.ராமநாதபுரம்

கொமதேக (ஒரு தொகுதி):

1.நாமக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, கொமதேக வேட்பாளர்கள் அறிவிப்பு: 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் தற்போதைய எம்.பி.யான சு.வெங்கடேசனும், திண்டுக்கல்லில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தமும் போட்டியிடுகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் தற்போதைய எம்.பி.யான கே.சுப்பராயனும், நாகையில் வை.செல்வராஜும் போட்டியிடுகிறார்கள்.

திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார்.

நாமக்கல் தொகுதியில் கொமதேக சார்பில் சூரியமூர்த்தி போட்டியிடுகிறார்.