விஜய்யின் ‘லியோ’ படத்தை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!

விஜய்யின் லியோ படத்தைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ’லியோ’. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்தை சிறப்பு திரையிடலில் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், படத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், விஜய்யை ‘தளபதி அண்ணா’ என்று அழைத்து அவருக்கு தம்ஸ் அப் கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தை ‘எக்சலண்ட்’ என பாராட்டியுள்ள உதயநிதி, இசையமைப்பாளர் அனிருத்துக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவுக்கும் கரவொலி எழுப்பும் கரங்களை குறியீடாக பதித்துள்ளார். மேலும், “ஆல் த பெஸ்ட் டீம்” என்றும் வாழ்த்தியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிவை விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.