‘மேல் நாட்டு மருமகன்’ கதாநாயகனுக்கு ஒரு விபரீத ஆசை!

உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் ‘மேல் நாட்டு மருமகன்’. இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயன் என்ற வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.எஸ்.எஸ். இப்படம் பற்றி இயக்குனர் எம்.எஸ்.எஸ்.கூறுகையில், “பணம், புகழ், காதல் என்று ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு ஆசை. இந்த படத்தின் நாயகனுக்கோ ஒரு விபரீத ஆசை. ஒரு அயல்நாட்டு பெண்மணியை காதலித்து திருமணம் செய்துகொண்டு மேல்நாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்பது தான் அந்த ஆசை.

“பணம் சம்பாதிப்பதாக இருந்தால் பரவாயில்லை; எந்த நாட்டிலும் சம்பாதித்து விடலாம். ஆனால் திருமணம் என்று வரும்போது பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும் நமது நாட்டைவிட வேறு நாடு கிடையாது. அப்படி இருக்க, நாயகனின் ஆசை நிறைவேறுமா? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

“படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. படப்பிடிப்பு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் நடைபெற்றுள்ளது” என்றார் இயக்குனர்.

ஒளிப்பதிவு    –    கே.கெளதம் கிருஷ்ணா

இசை   –  வே.கிஷோர் குமார்

படத்தொகுப்பு  –  விஜய் கீர்த்தி

கலை   –   ராம்

நடனம்   –  சங்கர்

பாடல்கள்   –   நா.முத்துக்குமார், நாஞ்சில் ராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ்

தயாரிப்பு நிர்வாகம்  –  ஆனந்த்

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி

Read previous post:
0a4d
“நமக்கு தேவை ஓர் உயர்சாதி அம்பேத்கர்”: பா.ரஞ்சித் பேட்டி – வீடியோ

கபாலி... கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருக்கும் சொல். தமிழ்நாடு மட்டுமல்ல.. உலக அளவில் வைரல் ட்ரெண்டிங்கில் கபாலி தொடர்ந்து முன்னிலை பெறுகிறது. விளம்பரங்கள், விவாதங்கள்,

Close