“சிவகார்த்திகேயனின் கண்ணீரும் கோபமும் நியாயமானது!”

சிவகார்த்திகேயனின் கண்ணீரும் கோபமும் நியாயமானது. உண்மையானது.

அரசியல், அதிகாரம், பணம் மற்றும் ஆள் பலத்தால் இங்கு எத்தனையோ பேர் பலி கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் கொடுக்கும் அழுத்தம் அளவிற்கு அதன் எதிர்வினையும் இருக்கும் என்கிற விதிப்படி சிவா இப்போது மேடையில் கொதித்திருக்கிறார். அவருடைய இந்த செயலை படத்தின் தரத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அரசியல் சினிமா வேறு, சினிமா அரசியல் வேறு.

சிவா, நீங்கள் இந்த அழுத்தங்களைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டு கலங்க வேண்டாம். கடந்த இரண்டு வருடங்கள் தமிழகத்தின் பல இடங்களுக்கு பயணித்தவன் என்கிற அடிப்படையில் சொல்கிறேன். குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை உங்களுக்கு அளித்திருக்கும் இடம் மிக உயர்ந்தது. உங்களை அழுத்துபவர்களால் அந்த இடத்தை ஒன்றுமே செய்துவிட முடியாது. அவர்கள் அழுத்திக்கொண்டே இருக்கட்டும். நீங்கள் உங்கள் வேலையை செய்து கொண்டே இருங்கள்.

WE ARE WITH YOU.

மீரா கதிரவன்

திரைப்பட இயக்குனர்