நாயை தூக்கி வீசிய மாணவ அரக்கர்களை பெற்றோரே போலீசில் ஒப்படைத்தனர்!

சென்னை புறநகரில், மாடியில் இருந்து நாயைத் தூக்கி எறிந்த மருத்துவ மாணவ அரக்கர்கள் இரண்டு பேரை அவர்களது பெற்றோர்களே போலீசில் ஒப்படைத்தனர்.

ஒரு இளைஞர் மாடியில் இருந்து ஒரு நாயை தூக்கி எறிவது போன்ற கொடூர வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது. இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் அளித்த புகாரினை அடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நாயை தூக்கி எறிந்த கௌதம் சுதர்சன் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். அதனை வீடியோ எடுத்த ஆசிஷ் பால் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இந்த இரண்டு கொடூரர்களும் மருத்துவ மாணவர்கள் என்பது தான் அதிர்ச்சியளிக்கும் தகவல்.

0a3p

இந்த இரண்டு அரக்கர்களையும் அவர்களது பெற்றோரே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 2 மாணவர்களையும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது போலீஸ்.

சம்பவத்தில் காயமடைந்த நாய்க்கு, சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த நாய்க்கு ‘பத்ரா’ என விலங்குகள் நல ஆர்வலர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

0a3q