நாம் தமிழர் கட்சி சார்பில் சரிபாதி தொகுதிகளில் பெண்கள் போட்டி: தொகுதிகள் விவரம்!

வருகிற மக்களைவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த 40 தொகுதிகளில் சரிபாதியளவு தொகுதிகளில் (அதாவது 20 தொகுதிகளில்) அக்கட்சி பெண் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

நாம் தமிழர் கட்சி சார்பில் பெண்கள் போட்டியிடும் 20 தொகுதிகள் வருமாறு:

1.ஆண்டிபட்டி

2.பெரியகுளம் (தனி)

3.தென்சென்னை

4.காஞ்சிபுரம் (தனி)

5.வேலூர்

6.தர்மபுரி

7.ஆரணி

8.விழுப்புரம் (தனி)

9.கள்ளக்குறிச்சி

10.ஈரோடு

  1. நீலகிரி (தனி)
  2. பொள்ளாச்சி

13.திருச்சி

  1. கடலூர்

15.மயிலாடுதுறை

16.நாகை (தனி)

17.சிவகங்கை

18.மதுரை

19.ராமநாதபுரம்

20.நெல்லை

நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண்கள் போட்டியிடும் 20 தொகுதிகள் வருமாறு:

1.மத்திய சென்னை

2.ஸ்ரீபெரும்புதூர்

3.அரக்கோணம்

4.கிருஷ்ணகிரி

5.திருவண்ணாமலை

6.சேலம்

7.நாமக்கல்

8.திருப்பூர்

9.கோவை

10.திண்டுக்கல்

11.தேனி

12.கரூர்

13.பெரம்பலூர்

14.சிதம்பரம் (தனி)

15.தஞ்சை

16.தூத்துக்குடி

17.தென்காசி (தனி)

18.கன்னியாகுமரி

19.புதுச்சேரி

20.விருதுநகர்

இதுபோல், இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), தஞ்சாவூர், அரூர் (தனி), மானாமதுரை (தனி), குடியாத்தம் (தனி), திருப்போரூர், திருப்பரங்குன்றம், பரமக்குடி (தனி), பூந்தமல்லி ஆகிய 10 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும், பெரம்பூர், ஆம்பூர், அரவக்குறிச்சி, நிலக்கோட்டை, விளாத்திகுளம், சாத்தூர், பாப்பிரெட்டிபட்டி, சோளிங்கர், திருவாரூர், ஒட்டப்பிடாரம் (தனி), ஓசூர் ஆகிய 11 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் நிறுத்தப்படுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.