தேசிய பங்கு சந்தையில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் பட்டியலிடப்படும் விழா – புகைப்படங்கள்

தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது.
இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தேசிய பங்கு சந்தையின் தென் மண்டல வணிக பிரிவின் தலைவரான கௌரி சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு சந்தை வர்த்தகத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவி புரியும் கம்பட்டா செக்யூரிட்டிஸ் லிமிடெட் நிறுவனத்தினை சார்ந்த விபின் அகர்வால், இந்நிறுவனத்தின் நிதி தணிக்கையாளரான சுந்தர்ராஜன், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் ஐசரி கே கணேஷ், முதன்மை நிர்வாக அதிகாரியான அஸ்வின், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவரான ப்ரீத்தா கணேஷ் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மேலும் இவ்விழாவில் தேசிய பங்கு சந்தையில் முதன்முதலாக பட்டியலிடப்பட்டிருக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் நிறுவனத்தின் முயற்சிகளை பாராட்ட தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜீவா, Hiphop ஆதி, ஆரி அர்ஜுனன், ஆரவ், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களும், இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி, பேரரசு, ஆர்வி உதயகுமார், ஆர். கே. செல்வமணி, கௌரவ் நாராயணன், நடிகை சங்கீதா கிரிஷ், இயக்குநர்கள் கோகுல், ஏ. எல். விஜய், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளில் ஒருவரான திருப்பூர் சுப்பிரமணியம் என திரையுலகின் முன்னணி பிரபலங்கள் வருகை தந்தனர். நிகழ்விற்கு வருகை தந்திருந்த அனைவரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் முன்னுதாரண முயற்சியை அங்கு அமைக்கப்பட்டிருந்த மணி ஓசையை எழுப்பி தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-