அஜித்துக்கான கதையில் ராகவா லாரன்ஸ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘இறைவி’. இதில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர் அடுத்ததாக அஜித்தை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. அதற்காக ஒரு கதையை உருவாக்கியதாகவும், அது குறித்து அஜித்திடம் பேசியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அஜித்துக்காக உருவாக்கப்பட்ட கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்த பின்னர் படத்தைப் பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாரன்ஸ் தற்போது ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read previous post:
jaya - sambath
நாஞ்சில் சம்பத் பதவியை காலி செய்த குணா, பாண்டே!

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்படுவதாக முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

Close