கமல்ஹாசனுடன் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய படம்!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முக்கிய நடிகையாக உயர்ந்து இருக்கிறார்.

அவரிடம் கடந்த சில வருடங்களாகவே “அப்பா கமலுடன் படத்தில் இணைந்து நடிப்பீர்களா?” என்று செய்தியாளர்கள் கேட்டு வருகின்றனர். அதற்கு அவர் “அப்பா மிகப் பெரிய நடிகர். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வீட்டில் இருக்கும்போது அப்பாவுடன் நடிப்பு ஒத்திகை பார்த்திருக்கிறேன். நடனம்கூட இணைந்து ஆடி இருக்கிறேன். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அந்த சந்தர்ப்பம் அமைந்தால் நடிப்பேன்” என்று கூறி வந்தார்.

இப்போது அந்த வாய்ப்பு அமைந்துள்ளது.

கமல் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குனர் சஞ்சீவ்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார். இதில் கமல் மகளாகவே ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Read previous post:
ajith and raghava 1 new
அஜித்துக்கான கதையில் ராகவா லாரன்ஸ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘இறைவி’. இதில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர் அடுத்ததாக அஜித்தை வைத்து

Close