கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்!

யூனியன்…

வாழ்க…

புரட்சி…

ஓங்குக…

துடிக்கும் ரத்தம் பேசட்டும்…

துணிந்த நெஞ்சம் நிமிரட்டும்…

உழைக்கும் வர்க்கம் சேரட்டும்…

உரிமை உடமை காணட்டும்… (துடிக்கும்)

1

இழந்துபோவது விலங்குகளே…

எதிரே உள்ளது பொன்னுலகம்…

நடந்துபோனவை கனவுகளே…

நடக்கப்போவது புதிய யுகம்…

ஒரு புதிய யுகம்…

இரண்டு வர்க்கம் இனிமேல் இல்லை

எழுந்து வாரீர் தோழர்களே…

சிவந்து நிற்கும் நெஞ்சத்தோடு

துணிந்து வாரீர் தோழர்களே… (துடிக்கும்)

2

மூலதனத்தில் பங்குண்டு…

முடிவில் வெல்லும் அறமுண்டு…

காலம் நமதே நமதென்று

கதவு திறக்கும் வா இன்று…

சிரித்த முகமும் நிறைந்த வாழ்வும்

காண வேண்டும் தோழர்களே…

காலம் நமதே நமதென்று

கதவு திறக்கும் வா இன்று… (துடிக்கும்)

# # #

(இன்று மே தினம்; உலக உழைப்பாளர் தினம்)

Read previous post:
0a1a
மே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்! மாற்று சோசலிசமே!

கொரானா வைரஸ் தாக்குதலால் இன்று உலகமே உறைந்து கிடக்கிறது. 184 -க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு. 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை வைரஸ் தொற்றியுள்ளது. இறப்பு எண்ணிக்கை இரண்டு

Close