“முகேஷ் அம்பானியின் ஆலோசகர் ‘சதுரங்க வேட்டை’ நட்டியாக இருக்குமோ”?!?

இந்திய தொலைதொடர்பு துறையை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்யும் நோக்கத்தில், சாமானிய மக்களின் ஆசையை தூண்டிவிட்டு அவர்களை கவர்ந்திழுக்கும் வகையில், ‘ஜியோ 4ஜி’ என்ற மிகப் பெரிய கவர்ச்சித் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்திருக்கிறார்.

அவர் எதிர்பார்த்தது போலவே பெரும்பாலான மக்கள் இந்த கவர்ச்சித் திட்டத்தை வரவேற்றிருக்கிறார்கள். உதாரணமாக, யோகனா யாழினி என்பவர் “நான் ஒவ்வொரு தடவையும் ஏர்டெல் நெட் கார்டு போடுறப்பல்லாம் மனசு கஸ்டமா இருக்கும். இப்படி நெட்டு பாத்தே ஆகனுமான்னு.. 300 ரூபாக்கு போட்டா பத்து நாளைக்கு கூட வராது. இந்த அநியாயத்துக்கு விடிவு காலம் வராதான்னு போனமாசம் நெனச்சேன். வந்துருச்சு.. ரிலையன்ஸ் அவ்ளோ புடிக்காது.. எதிரிக்கு எதிரி நண்பன் மாதிரி.. நவ் ஐ லைக் ஜியோ” என்று தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

ஆனால், முகேஷ் அம்பானியின் கவர்ச்சித் திட்டத்தையும், உள்நோக்கத்தையும் ஏராளமான பதிவர்கள் கிண்டலடித்து கலாய்த்திருக்கிறார்கள்.

Jose Kissinger என்பவர், “Jio லோகோவை கவனித்துப் பாருங்கள்.. திருப்பி படியுங்கள்… oiL மாதிரி இல்ல?

0a1h

Read Jio logo in reverse. isn’t looks like oiL? Jio revenue loss will be equated by massive oiL price hike. Don’t forget “chor” hails from a city called Chorwad, Gujarat.

Jio தரப் போகுது ரூ 50/GB டேட்டா.. ரொம்ப சீப் தான்… ஆனால், நள்ளிரவு முதல் பெட்ரோல் ரூ 3.38/- ம் டீசல் ரூ 2.67/- ம் விலை உயர்த்தப்பட்டுள்ளது, சர்வதேச அளவில் 4% விலை குறைந்துள்ளபோது. Jio வில் இழப்பது oiL மூலம் பல மடங்கு வசூலிக்கப்படும்.

US crude settles at $44.70 a barrel, down $1.65, or 3.56 pct
https://t.co/KFVddeMTfA

#Jai Ho” என்று பதிவிட்டுள்ளார்.

பாரதி நாதன், “அலோ அம்பானியா… என்னமோ நெட்டு வெலைய கொறச்சிட்டீங்களாம். சந்தோசம். இந்த பெட்ரோல் விக்கிறீங்களே, அதோட வெலைய எப்ப சார் கொறைப்பீங்க? உங்க சாதனை தொடரணும்னு கேட்டுக்குறோம்.’” என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.

இரா.கனகராஜ், “எனக்கென்னவோ அம்பானியோட தொழில் ஆலோசகர் ‘சதுரங்க வேட்டை’ நட்டியாக இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு…!” என்று கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

சுரேஷ் கண்ணன், “இப்ப புதுக்கல்யாணம் ஆனவர்கள் மாதிரி ‘ஜியோ ஜியோ’ன்னு உற்சாகமாக கூவுகிறவர்கள் எல்லாம் சிறிது காலம் கழித்து, ரேஷன் கடை க்யூவில் எரிச்சலுடன் நிற்கிறவர்கள் போல சுருதி மாற்றி ‘ஐயோ ஐயோ’ என்று கூவப் போகிறார்கள் என்று தோன்றுகிறது” என்று கவலை தெரிவித்துள்ளார்.