ஜெயலலிதாவின் “அனல்” பிரசாரத்தில் மேலும் 2 பேர் பலி!

முன்பெல்லாம் “அனல் பிரசாரம்” என்றால், பிரசாரம் செய்பவரின் பேச்சில் கருத்துக்களும், தொனியும் அனல் போல் இருக்கும் என்று பொருள்படும். ஆனால், 2016 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாரம் செய்துவரும் ஜெயலலிதா, இந்த பொருளையே மாற்றியமைத்து விட்டார். இப்போது “ஜெயலலிதா அனல் பிரசாரம்” என்றால், அனலாய் கொதிக்கும் கோடை வெயிலில் மக்களை அழைத்துவந்து சுட்டெரிக்கும் சூரியனுக்குக் கீழ் வெட்டவெளியில் அடைத்து வைத்து, அவர்கள் கதறக் கதற ஜெயலலிதா பிரசாரம் செய்வது என்றாகிப் போய்விட்டது.

சில நாட்களுக்குமுன் விருத்தாசலத்தில் ஜெயலலிதாவின் “அனல்” பிரசாரம் காரணமாக இரண்டு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். 50 பேர் மயக்கம் அடைந்தனர்.

அதுபோல் இன்று (புதன் கிழமை) சேலம் அருகே மகுடஞ்சாவடியில் ஜெயலலிதா மேற்கொண்ட “அனல்” பிரசாரத்தில், வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பெரியசாமி, பச்சையண்ணன் ஆகியோர் உயிரிழந்தனர்.

ஜெயலலிதாவின் பிடிவாதமான “அனல்” பிரசாரத்துக்கு இன்னும் எத்தனை மனித உயிர்கள் பலியாகுமோ…!