திரையரங்கில் ‘ஜன கண மன’ பாடல் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

இந்தியா முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் திரைப்படம் ஆரம்பமாவதற்கு முன் ‘ஜன கண மன’ பாடல் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளையில் இப்பாடலை சுருக்கி இசைக்க தடை விதித்துள்ளது.

திரையரங்குகளில் ‘ஜன கண மன’ இசைக்கப்படும்போது, படம் பார்க்க வந்திருப்பவர்கள் அரங்கில் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.

இப்பாடல் இசைக்கப்படும்போது, திரையில் இந்திய அரசின் மூவர்ண கொடியை திரையிட வேண்டும்.

இப்பாடல் இசைக்கப்படும்போது அதில் எவ்வித விளம்பர ஆதாயமும் தேடக் கூடாது.

இப்பாடல் வரிகளை விரும்பத்தகாத பொருட்களின் மீது அச்சிடக் கூடாது.

இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு வார காலத்துக்குள் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை செயல்படுத்தாத திரையரங்குகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைபடுத்துவதாக மத்திய மோடி அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.