முகிலன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா?

I think we should change the question from #WhereIsMugilan?

நஜீப் காணாமல் போய் ஒரு வருடம் முடிந்தது. அதே இழுத்தடிப்பு உத்தியைத் தான் தமிழ்நாட்டு காவல்துறையும் உபயோகித்துக் கொண்டிருக்கிறது. நாம் ‘முகிலன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா?’ ‘முகிலன் உயிருக்கு தமிழக காவல்துறைதான் பொறுப்பு’ என்ற யூகங்களை மாற்று கேள்வியாக வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டி இருக்கிறது.

ஜனநாயக நாட்டில் மக்கள் அறிந்த ஒரு சமூக செயற்பாட்டாளர் ஒரு மாதமாக காணவில்லை என்று தொடரப்பட்ட வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. இன்னும் தீவிரமாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சாக்குப்போக்கு சொல்லி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நேற்று நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், //தமிழகம் முழுவதும் 40 தனிப்படையினர் நடத்திய விசாரணையில் 251 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், ரயில் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகிலனை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நெருக்கமான பெண் ஒருவரை புறக்கணித்ததால் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, நண்பர்களின் சமரச முயற்சியை தவிர்க்க அவர் தலைமறைவாகி இருக்கலாம் என அப்பெண் சாட்சி அளித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.//

அப்படியே தோழர் முகிலன் தனிப்பட்ட காரணத்தினால் தலைமறைவாகி இருந்திருக்கலாம் என்றால்கூட தமிழக காவல்துறை இந்நேரம் அவர் இருப்பிடம் கண்டுபிடித்திருக்க வேண்டாமா? இறுதியில், பெண் உறவு என்கிற காரணத்தை தான் இவர்களால் கொண்டு வரமுடியும். இது தான் இவர்களின் உத்தி. தோழர் முகிலன் மேல் இந்த பிம்பத்தை அமைதியாக கட்டவிழ்க்கிறது அரசும் காவல்துறையும். தமிழக Scotland Yardன் உண்மை தேடும் வழி இப்படியான ‘character damaging’ மட்டும்தான். தனக்கு தீயிட்டு இறந்த செங்கொடியில் தொடங்கி, அனுப்பரியா, விவசாயிகள் தற்கொலை வரை இவர்கள் சொன்ன காரணங்கள் இவைதானே!

என்னவானாலும் தோழர் முகிலனின் உயிருக்கு பொறுப்பு தமிழக அரசும் காவல் துறையும்தான்.

சுதந்திர நாட்டில், பொது வாழ்க்கையில் இருக்கும் ஒரு நபர் காணாமல் போகிறார். அவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தனி நபர் பாதுகாப்பை உறுதி செய்யமுடியாத failed government ஆகத்தான் இந்த அரசு இருக்கிறது.

KAVITHA GAJENDRAN

 

 

Read previous post:
0a1a
கருத்துக் கணிப்பு முடிவு: தமிழகம், புதுவையில் திமுக கூட்டணிக்கு 35; அதிமுக கூட்டணிக்கு 5

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியும் விஎம்ஆர் சர்வே நிறுவனமும் இணைந்து நாடு முழுவதும் பரவலாக 16,931 பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தின. இதன் முடிவுகள்

Close