மோடி அரசு சதி அம்பலம்: “காரைக்காலில் அல்ல, நாகையில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம்!”

டெல்லியில் முகாமிட்டுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துப் பேசினார். அப்போது, “மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதில் புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் பகுதியும் ஒன்று. காரைக்கால் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. மக்களும், விவசாயிகளும் எதிர்க்கும் திட்டம் தேவையில்லை” என்று நாராயணசாமி வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஹைட்ரோ கார்பன் திட்டம் பாரத் பெட்ரோ ரிசோர்சஸ் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காரைக்காலில் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. காரைக்காலில் இருந்து 10 கி.மீ தொலைவில் நாகையில் தான் செயல்படுத்தப்பட உள்ளது” என்றார்.

.இருப்பினும், தமிழக பகுதி விவசாயிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதை முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சரிடம் பதிவு செய்தார்.

Read previous post:
0
Anna Hazare writes to PM, says he’s ‘mulling’ launching agitation on Lokpal

Social activist Anna Hazare today wrote to Prime Minister Narendra Modi, accusing the BJP-led government of being apathetic to the

Close