“தாஜ்மகால் விரைவில் இந்து கோயிலாக மாறும்!”: கோட்சேத்துவா எம்.பி. திமிர் பேச்சு!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ‘தாஜ் மஹோத்தவ் விழா’வை அம்மாநிலத்தின் ஆதித்யநாத் தலைமையிலான கோட்சேத்துவா அரசு வரும் 18ம் தேதி முதல் நடத்துகிறது. இது குறித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜகவின் கோட்சேத்துவா எம்.பி வினய் கட்டியார் கூறுகையில்,

‘‘தாஜ்மகால் என்பது மொகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்திற்கு முந்தையது. அப்போது தேஜ் கோயிலாக இருந்தது. அந்த கோயிலை ஒளரங்கசீப் மயானமாக மாற்றி விட்டார். இருப்பினும், மக்கள் மனதில் அது சிவனின் ஆலயமான தேஜ் கோயிலாகவே உள்ளது. எனவே இதற்கு விழா எடுப்பது தவறல்ல. எங்களை பொறுத்தவரை தாஜ்மகாலும், தேஜ் கோயிலும் ஒன்று தான். அது விரைவில் கோயிலாக மாறும்’’ என்றார்..

பாஜக உள்ளிட்ட கோட்சேத்துவா அமைப்புகளைச் சேர்ந்த பலரும்,  ‘தாஜ்மகால் இந்து கோயில்’ என தொடர்ந்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read previous post:
0a1c
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – விமர்சனம்

இப்படத்தின் முதல் டீஸரில், “ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?” என்ற கேள்வியை எழுப்பும் விஜய் சேதுபதி, “இந்த கதையில் ராமனும் நான் தான்; ராவணனும் நான் தான்”

Close