பிரண்ட்ஷிப் – விமர்சனம்

ஹர்பஜன் சிங், சதீஷ் உள்ளிட்ட நண்பர்கள் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் படித்து வருகிறார்கள். மாணவர்கள் மட்டுமே இருக்கும் அந்த வகுப்புக்கு ஒரேயொரு மாணவியாக நாயகி லாஸ்லியா வந்து சேருகிறார். ஆரம்பத்தில் லாஸ்லியாவுடன் ஹர்பஜன் சிங் & நண்பர்கள் பழக மறுத்து ஒதுக்கி வைக்கிறார்கள். ஆனால் குறும்பும் சுறுசுறுப்பும் மிக்க லாஸ்லியா, சில நாட்களிலேயே அவர்களுக்கு  நெருங்கிய சினேகிதி ஆகிவிடுகிறார். ஒருநாள் லாஸ்லியா படுகொலை செய்யப்படுகிறார். கொலைப்பழி நண்பர்கள் மீது விழுகிறது. உண்மையில் கொலையாளிகள் யார்? கொலைப் பழியிலிருந்து நண்பர்கள் மீண்டார்களா? என்பது மீதிக்கதை

நாயகனாக நடித்திருக்கும் ஹர்பஜன் சிங், படம் முழுக்க அதிக வசனம் பேசாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடனம், ஆக்ஷன் என திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சதீஷ். காமெடியை விட சென்டிமென்ட் காட்சிகள் சதீஷுக்கு கைகொடுத்து இருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா சுட்டித்தனமாக, இளமை துள்ளலுடன் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பு சில இடங்களில் செயற்கைத்தனமாக இருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே வந்தாலும் ஆக்ஷன் மற்றும் நடிப்பில் அசத்தி இருக்கிறார் அர்ஜுன்.

நட்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா. அதே நேரத்தில் நட்பை வெளிப்படுத்தும் விதமான அழுத்தமான காட்சிகள் இல்லாததால் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் மேலோட்டமாக இருக்கிறது. ஹர்பஜன் சிங்கை அதிகம் பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார் இயக்குனர். அவருக்கென்று கிரிக்கெட் காட்சிகள் வைத்திருப்பது போல் இருக்கிறது. இறுதியில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசியதற்கு வாழ்த்துகள்.

இசையமைப்பாளர் டி.எம்.உதயகுமாரின் பாடல்கள் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற துள்ளல் ரகம். பின்னணி இசை படத்திற்கு ஏற்ப பயணித்துள்ளது.

ஒளிப்பதிவாளர் சாந்தகுமார்.சி கல்லூரி காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். அதை விட லொஸ்லியாவை கலர்புல்லாக கட்ட அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.

‘பிரண்ஷிப்’ –  பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு படம்.

 

Read previous post:
0a1s
Sarathkumar starrer new project launched

Actor Sarathkumar’s new film produced by Roshkumar of M360° Studios and directed by debutant Thirumalai Baluchamy was launched on September

Close