ஒத்த கருத்துடைய அதிமுக, திமுக அதிகாரத்தை நிரப்புகின்றன!

முல்லைப்பெரியாறு, கூடன்குளம், கெயில் திட்டம், எழுவர் விடுதலை, தமிழ்வழிக்கல்வி, தனியார்மய மின்சாரம், தனியார்மய மருத்துவம், நியூட்ரினோ திட்டம், மீனவர் மீதான ஒடுக்குமுறை, மீத்தேன் – ஷேல் கேஸ் திட்டங்கள், ஈழத்தமிழர்களுக்கான் சிறப்பு சித்திரவதை முகாம், 20 தமிழர் படுகொலை என தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளில் / நிகழ்வுகளில் மக்கள் நலனுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த அதிமுக அதிகாரத்திற்கு வந்திருக்கிறது.

அதிமுகவின் அதே நிலைப்பாட்டினைக் கொண்ட திமுக பிரதான எதிர்க்கட்சியாகி இருக்கிறது.

மக்களுக்கு எதிரான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஒத்த கருத்துடைய இரண்டு கட்சிகளும் அதிகாரத்தினை நிரப்புகின்றன.

கடந்த காலத்தினைப் போல, போராட்டங்கள் நிறைந்த எதிர்காலம் நம் கண்முன் விரிகிறது.

– திருமுருகன் காந்தி

மே 17 இயக்கம்

Read previous post:
0a2w
“எமது பயணம் தொய்வின்றி தொடரும்”: திருமாவளவன் அறிக்கை!

“எமது நோக்கம் உன்னதமானது. எமது பயணம் தொய்வின்றி தொடரும்” என்று மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். தமிழக

Close