“நான் பச்சைத் தமிழன்; என் பூர்விகம் கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பம்!” – ரஜினிகாந்த்

ரசிகர்களுடனான 5-வது நாள் சந்திப்பான இன்று (வெள்ளிக்கிழமை), ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது:

ரஜினிகாந்த் தமிழரா என்ற கேள்வி வருகிறது. எனக்கு இப்போது 67 வயதாகிறது. 23 ஆண்டுகள் மட்டும் தான் கர்நாடகாவில் இருந்தேன். மீதம் 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன். உங்க கூடவே வளர்ந்தேன்.

மராட்டியக்காரனாகவோ, கன்னடக்காரனாகவோ வந்திருந்தால் கூட, என்னை ஆதரித்து பெயர், புகழ், பணம் என அள்ளிக் கொடுத்து, நீங்கள் தான் என்னை தமிழனாக ஆக்கிவிட்டீர்கள். ஆகவே, நான் பச்சைத்தமிழன். என்னுடைய மூதாதையர்கள் கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள் என்பதை சொல்லியிருக்கிறேன்.

‘இங்கியிருந்து வெளியே போ’ என்று சொல்லித் தூக்கிப் போட்டால் நான் இமயமலையில் தான் போய் விழுவேனே தவிர, வேறு எந்தவொரு மாநிலத்துக்கும் போய் விழ மாட்டேன். தமிழ் மக்கள், நல்ல மக்கள், நல்ல உள்ளங்கள் இருக்கிற பூமியில் இருந்தால் இருக்க வேண்டும்; இல்லையென்றால் சித்தர்கள் இருக்கின்ற இமயமலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Read previous post:
0a
“அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம்”: ரஜினிகாந்த் அதிரடி!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி முதல் சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். இன்றுடன் ரசிகர்களுடனான சந்திப்பு நிறைவடைகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) ரசிகர்கள்

Close