பேயும் பேயும் காதலித்து டூயட் பாடுதாம்! என்னமா கத வுடுறானுங்க!!

அலெக்ஸ் கிரியேசன்ஸ் தயாரிப்பில், பிரான்ஸிஸ் ராஜ் இயக்கும் படம் ‘என்னமா கத வுடுறானுங்க’. இதில் நாயகனாக ஆர்வி நடிக்கிறார். நாயகிகளாக ஷாலு மற்றும் அலிஷா சோப்ரா நடிக்கிறார்கள்.  இவர்களுடன் ரவி மரியா, மயில்சாமி மற்றும் பலர் நடிக்கிறார்கள். ரவி விஜய் ஆனந்த் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து இதன் இயக்குனர் பிரான்ஸிஸ் ராஜ் கூறுகையில், “திரைப்படத்தில் மனிதன் பேயை காதலித்து பார்த்திருப்பீர்கள். பேய் மனிதனை காதலித்து பார்த்திருப்பீர்கள். ஆனால், பேயும் பேயும் காதலித்து பார்த்திருக்கிறீர்களா? பேயும் பேயும் காதலித்து டூயட் பாடுவதை பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்கிறீர்களா? இந்த படத்தில் பார்ப்பீர்கள்.

“காதல், அதனால் உண்டாகும் சோகம், சந்தோஷம், வலி, கண்ணீர் இவை யாவும் உயிரோடிருக்கும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, பேய்களுக்கும் இருக்கிறது என்பதைச் சொல்கிறது இந்தப் படம். தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வந்த அனைத்து பேய் படங்களைக் காட்டிலும் வித்தியாசமான திரைக்கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

“கோட்டை மேடு என்ற கிராமத்தில் இந்தப் படத்துக்காக நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஷூட்டிங் நடத்தினோம். அப்போது டெக்னிக்கல் உதவியுடன் வந்த பேயைப் பார்த்து டெக்னீஷியன்களே மிரண்டு போனார்கள். அந்த கிராமத்து மக்கள் பயந்துபோய் சாமிக்கு பூஜை பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்” என்கிறார் இயக்குநர்.

ம்…! என்னமா கத வுடுறானுங்க…!