“விரைவில் தி.மு.க. ஆட்சி மலரும்”: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

“நமது ஆட்சி விரைவில் மலரும் காலம் வரும். அப்போது அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நல்லாட்சியை வழங்குவோம்” என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இடம்பெற்றுள்ள கவனிக்கத் தக்க வாசகங்கள் வருமாறு:

‘தமிழகத்தில் யார் முதல்வராவது என்ற போட்டியில் அரசு நிர்வாகம் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது…

தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளே, நம்மை பொறுத்தவரை, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுகிற இயக்கம் தான் திமுக. எளிய மக்கள் பக்கம் கவனத்தைத் திருப்புவோம். ஆள்பவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்போம்.

நமது ஆட்சி விரைவில் மலரும் காலம் வரும். அப்போது அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நல்லாட்சியை வழங்குவோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது இன்றைய தமிழக அரசியல் சூழலில் கவனிக்கத் தக்கதாக கருதப்படுகிறது.

 

Read previous post:
0a1b
மன்னார்குடி மாஃபியாவின் கொடூர குரல் இன்று வெளிப்பட்ட தருணம்!

அடிக்கடி கண் கலங்குபவராகவும், மெல்ல நடப்பவராகவும், சற்று அச்சம் கலந்த குரலில் பேசுபவராகவும் வெளியில் பாவலா காட்டி வந்த மன்னார்குடி மாஃபியா சசிகலாவின் சுயரூபம் இன்று வெளிப்பட்டுவிட்டது.

Close