அதிமுக அரசே… அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்து!

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்திற்குப் பிறகு, மதுரையில் தோழர். திவ்யா பாரதி மீதான தாக்குதலானது, அதிமுக பழனிசாமி அரசாங்கத்தின் திட்டவட்டமான காவிப் பாசிச மோடி அரசின் ஆதரவுப் போக்கை உறுதிப்படுத்துகிறது.

‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநரும், அரசியல் செயல்பாட்டாளருமான தோழர்.திவ்யா பாரதி இன்று காலை மதுரையில் பழைய வழக்கிற்காகக் கைது செய்யப்பட்டார். மதுரையில் விடுதியில் தலித் மாணவர் இறப்பின் மீதான நியாயத்திற்காக, விசாரணைக்காக 2009ல் அரசு மருத்துவமனையில் மாணவர்கள் போராடியபோது, AISA மாணவர் சங்க அமைப்பாளரான திவ்யாவும் பங்கெடுத்துக் கொண்டார். அப்போது போடப்பட்ட போராட்ட வழக்கிற்கு, 8 ஆண்டுகள் கழித்து தோண்டியெடுத்து, அரெஸ்ட் வாரண்ட் உடன் அவரது வீட்டிற்கு சென்ற காவலர்கள் அவரைக் கைது செய்து மதுரை Jm2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் சில மணி நேரம் கழித்து, நிபந்தனை பிணை வழங்கியிருக்கிறது. ஒரு வாரம் தினசரி மதிச்சயம் காவல்நிலையம் சென்று கையெழுத்திட வேண்டும். இது தோழர்.திவ்யாவின் செயற்பாட்டை முடக்க நினைக்கும் சதியாகும்.

தமிழகத்தில் FIR போடப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகளில், அரசியல் பிரமுகர்கள், செல்வந்தர்கள், மாஃபியாக்கள், அமைச்சர்கள் இதுவரையிலும் கைது செய்யப்படாமல் இருக்கிறார்கள். சட்டம், நீதி முன்னால் அனைவரும் சமம் தானே!

ஏன் அவர்கள் மீது சட்டம் கையை நீட்டவில்லை?

கம்யூனிஸ்டுகள், அநீதிக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுபவர்கள் மீது மட்டும் சட்டம் தன் கடமையைச் செய்கிறது.

திவ்யா பாரதி மீதான தாக்குதல், தலித் மாணவர்களுக்காக அவர் குரல் கொடுத்த்து தவறு என அதிமுக அரசாங்கம் கருதுவதாலா?

#கக்கூஸ் ஆவணப்படம் மூலமாக அதிமுக அரசாங்கத்தின் தலித் விரோதப் போக்கை நாறடித்து அம்பலப்படுத்தினார் என்பதாலா?

பெண் அரசியல் செயற்பாட்டாளர்களை துவக்கத்திலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்ற அதிகார வர்க்கத்தின் ஆணாதிக்க மனப்பான்மையாலா ?

அதிமுக அரசே! அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்து!

CHANDRA MOHAN

CPIML (Liberation)

Read previous post:
0
8 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது!

‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதியை, 2009ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் அடிப்படையில் போலீஸார் இன்று (செவ்வாய்க் கிழமை) கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்தவர்

Close