“விஜய், அஜித் படங்களை மீண்டும் இயக்க ஆவலுடன் இருக்கிறேன்!” – எழில்

விஜய் நாயகனாக நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித் நாயகனாக நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் எழில்.

சமீபத்தில் முழுநீள காமெடி படங்களை இயக்கிவரும் எழில், உதயநிதி ஸ்டாலினை நாயகனாக வைத்து ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மே 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக செய்தியாளர்களை சந்தித்த எழிலிடம், “மீண்டும் அஜித், விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எழில் “இன்று அவர்களுக்கான சந்தை பெரியது. ரசிகர்கள் அவர்களிடமிருந்து விசேஷமாக எதாவது எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்றவாறு கதை எழுத குறைந்தது ஒரு வருடம் நான் செலவழிக்க வேண்டும். அஜித் மற்றும் விஜய்யுடன் வேலை செய்ய எப்போதும் ஆவலுடனே இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார் எழில். இதற்கான முதற்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.