தனிமனித உறவுகளை அரசியலாக முன்னிறுத்தும் தா.பாண்டியன்!

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளிகளைக் கொச்சையாக பேசியபோதே தா.பாண்டியன் மீது கட்சி வெளிப்படையான கண்டனத்தைத் தெரிவித்திருக்க வேண்டும்.

மார்க்ஸ் சூழலியல் பற்றிச் சொன்னதையும் பெல்லாமி போஸ்ட்டர் எழுதியதையும் படிக்காவிட்டால் பரவாயில்லை, செர்னோபில் அழிவுகள்கூட அவருக்குத் தெரியவில்லை.

எப்படி ஒரு மார்க்சியர் எனத் தன்னை அழைத்துக்கொள்பவர் கையறுநிலையில் போராடும் மக்களை அவமானகரமாகப் பேசமுடியும்?

தமிழக அளவில் தனிமனித உறவுகளை அவர் அரசியலாக முன்னிறுத்தத் துவங்கி பல காலம் ஆகிறது. அவரது பொறுப்புகளில் இருந்து அவரே வெளியேறுவதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நல்லது..

– யமுனா ராஜேந்திரன்

Read previous post:
0a2n
“விஜயகாந்த் என்ற சுமை விலகினால் மக்கள்நலக் கூட்டணிக்கு நல்லது!”

“தமிழ்நாட்டில் சல்லிக்காசுக்கு போணியாகாத காங்கிரஸ் கட்சி என்ற சுமையை திமுக சுமந்து திரிவதைப் போல, பொதுவெளியில் பொறுப்பில்லாமல் அநாகரிமாக நடந்துகொள்ளும் விஜயகாந்த் என்ற சுமையை தேவையில்லாமல் நாங்கள்

Close